முஸ்லிம் விவாக சட்டத்திருத்தம் தொடர்பான அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு


முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூப் மூலம் நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த திருத்தம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 2009ம் ஆண்டில் முன்னாள் நீதியமைச்சர் மூலம் 17 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த குழுவின் அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் தலதா அத்துகோரல மூலம் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
குழுவின் அறிக்கையில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்களில் உள்ளடங்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் திருமண வயது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.