முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வருவதை தவிர்க்க பெரிய பள்ளிவாசல் எடுத்த தீர்மாணம்.... ரோசி உரையின் உண்மைத் தன்மை என்ன ?


அஷ்ரப். ஏ சமத்

ரோசி சேனாநாயக்க நேற்று (23) திகதி பி.பகல் பெரோசா முசம்மிலின் கொள்ளுப்பிட்டி இல்லத்தில் ஆற்றிய உரையின் உண்மைத் தன்மை என்ன ?


கொழும்பு பெரிய பள்ளிவாசல் அவ்வாறானதொறு முடிவை எடுத்ததா ?

அவரது உரையின்போது - 

கொழும்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது  ஜ.தே.கட்சியில் பெரோசாவும் போட்டியிட்டார் ஆனாலா முஸ்லீம்களது வாக்குகள் பேரொசா முசம்மிலுக்கு கணிசமாக கிடைக்கவில்லை.கிடைத்திருந்தால் அவரும் இன்று பா.உறுப்பினராயிருப்பார். அதற்கு காரணம் கொழும்பு  பெரிய பள்ளிவாசலில் தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தனர்.

பெரோசாவுக்கு எம்பி யாக வருவதற்கு வாக்களிக்க வேண்டாம் முஸ்லீம் பெண்கள் அரசியல் வருவது நல்லதல்ல எனத் தீர்மாணம் எடுத்தாதலேயே அவர் எம்.பி யாக வரமுடியவில்லை.

மேலும் கொழும்பில்  வாழும் முஸ்லிம்கள்  பெரோசாவுக்கு விருப்பு வாக்குகள் அளிக்கவில்லையெனத் தெரிவித்தார்.

பேரோசா முசம்மில் - ரோசி சேனாநாயக்காவினை ஆதரித்து  நடாத்திய காந்தா சவிய மகளிர் அமைப்பின் கூட்டத்தின்போதே ரோசி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரின் உரையின் உண்மைத் தன்மை என்ன ? கொழும்பு பெரிய பள்ளிவாசல் அவ்வாறானதொறு முடிவை எடுத்ததா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபடுத்துவார்கள?

தொடர்ந்து  உரையாற்றிய ரோசி சேனாநாயக்க-

கொழும்பு உன்னதமான டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட மாநகர சபையாக மேம்படுத்தப்படும்,  கொழும்பு மநாகரத்தில் 50 ஆயிர்ம் வீடுகள் மத்திய தரத்தினருக்காக நிர்மாணிக்கப்படும். அத்துடன் குறைந்த வட்டியில் தேசிய வீடமைப்பு வங்கி ஊடகாக கடன் வழங்கப்படும் இத்திட்டத்திற்காக 75 மில்லியன் ருபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஆசியாவின் ஒரு சிறந்த வா்த்தக பொருளாதார நிலையமாக கொழும்பு அபிவிருத்தி பெரும் கொழும்பு செழிப்புமிக்க மற்றும் பசுமை நகரம்  ஆகும்.  சமுக பொருளாதார  நடைமுறைக்கு  பொருந்தும்  வகையில்  மா நகர மக்களின் இயற்கை கழிவு சுகாதாரம் உள்ளிட்ட சமுக கேந்திர  சேவைகளை நோக்கமாகக் கொண்டு  நிலைபேறா  அபிவிருத்தியை முன்னெடுப்பதே   கொழும்பு மா நகயர சபையின் மேயராக போட்டியிடுவதாக ரோசி சேனநாயக்க தெரவித்தார்.

6 இலட்சத்து 50 ஆயிரம் மேற்பட்ட மக்கள் வாழும் உங்கள் கொழும்பு நகரில்  நீர் விநியோகம்,  மற்றும் இயற்கை கழிவு  கட்டமைப்பு 800 வருடங்களுக்கு மேல்  பழமை வாய்ந்ததாகும்.  பிராந்தியத்தில்  ஏனைய எடுத்துக்காட்டு பசுமை நகரங்களுக்கு  அமைவாக கொழும்பு  இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. 

அபயாகர டெங்கு  மற்றும் கழிவுப் பொருட்கள் போன்ற பொதுவான விடயங்களினால் மக்கள்  வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருந்த கொழும்பை  நாம் இன்று  மறந்துவிடவில்லை. இந்த விடயங்கள் எமது மனதை விட்டு இன்னும் நீங்கவில்லை என மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.