களுவாஞ்சிகுடி வேட்பாளர் ஒருவரின் வாகனம் தீக்கிரை


களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் வாகனம் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபைக்கு களுதாவளை பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

களுதாவளை - வன்னியார் வீதியில் உள்ள வேட்பாளர் குணராசா ஜெகதீஸ்வரன் என்பவரின் வாகனமே இவ்வாறு தீயிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் வாகனம் தீயிடப்பட்டுள்ளதாகவும், இதில் சிறிய கன்டர் வாகனம் முற்றாக தீயில் எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.