அன்பார்ந்த முஸ்லிம்களே வாக்களிப்பில் கலந்துகொள்ளுங்கள் - முஸ்லிம் கவுன்ஸில்

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பில் கலந்துகொள்வதற்கு இந்நாட்டு முஸ்லிம்கள் கூடிய கரிசனை காட்ட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் வேண்டுகோள் விடுத்தார்.
இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என டெய்லி சிலோனுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க முஸ்லிம்கள் தவறிவிடக் கூடாது. பிழைத்த பின்னர் கைசேதப்படுவதில் பயனில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். வாக்குச் சாவடிக்குள் எடுக்கும் முடிவுகள் ஊரிலும், நகரிலும் மாத்திரமன்றி நாட்லும் எதிர்கால சந்ததிகள் வாழ்வில் நல்லதையோ, கெட்டதையோ விளைவிக்கப் போகின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
முஸ்லிம்கள் தங்களது வாக்குப் பலத்தை இந்நாட்டிலுள்ள கட்சிகளுக்கு எடுத்துக் காட்ட வேண்டும். ஒரு நாட்டில் வாழும் மக்களின் அனைத்து உரிமைகளுக்குமான ஒரே ஆயுதமாக இந்த வாக்குப் பலம் பார்க்கப்படுகின்றது. அரசியல், ஆட்சி, அதிகாரம் என்பனவற்றைத் தீர்மானிக்கும் வாக்குப் பலமே, அக்கிரமக்காரர்களிடமிருந்து மக்களை மீட்பதற்கான  போராட்டத்தின் வழிமுறையாகும்.
சரியான நேரத்தில் அந்தப் பலத்தை வெளிப்படுத்தி எமது பலத்தை நிரூபிக்க வேண்டும். நேர்மையாகவும், பொதுத் தன்மையுடனும், இனவாதமில்லாத முறையிலும் தங்களை ஆட்சி செய்ய தகுதியான ஒருவரை தெரிவு செய்வதற்கு முஸ்லிம்கள் தங்களது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.
முஸ்லிம்கள் வாக்களிக்காது தவிர்ந்து கொள்கின்றபோது, தகுதியில்லாத மோசமானவர்கள் பொறுப்புக்களுக்கு தெரிவாகும் நிலைமை உருவாகும். நாட்டில் நெருக்கடியான ஒரு சூழல் நிலவிய காலப் பகுதியில் முஸ்லிம்கள் தேர்தலில் காட்டிய அக்கரை குறைந்துள்ளதாக கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இக்குற்றச்சாட்டிக்கு முஸ்லிம்களாகிய நாம் ஆளாகிவிடக்கூடாது.
தமது கிராமத்துக்கு பொருத்தமானவரை தெரிவு செய்யும் விடயத்தில் முஸ்லிம்கள் ஆர்வம் காட்ட வேண்டும். எம்மை நோக்கி வரவுள்ள அடுத்த கட்ட தேர்தலுக்கும் முஸ்லிம்களின் வாக்குப் பலம் எத்தகையது என்பதை வெளிக்காட்ட முஸ்லிம்கள் தவறிவிடக் கூடாது எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் டெய்லி சிலோனிடம் மேலும் தெரிவித்தார். 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.