மாணவியை கற்பழித்து ஆபாசபடம் எடுத்த மாணவருக்கு 10 ஆண்டு சிறை

டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவருக்கு, அதே பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்துக் கொண்டனர். அப்போது பலமுறை அந்த மாணவியை மாணவன் கற்பழித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒன்றாக இருக்கும்போது போன்மூலம் வீடியோ படத்தையும் எடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி தரப்பில் போலீசில் புகார் கூறப்பட்டது. அதில் தனக்கு மயக்க மருந்து கொடுத்து மாணவன் கற்பழித்துவிட்டதாக புகார் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்தனர். இந்த வழக்கு டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி பிரிதம்சிங் இதை விசாரித்தார்.
அப்போது குற்றவாளி தரப்பில் ஆஜரான வக்கீல் மாணவியுடைய சம்மதத்தின் பேரில்தான் அவருடன் மாணவன் உறவு ஏற்படுத்திக் கொண்டுள்ளளர். இதை கற்பழிப்பு குற்றமாக பார்க்ககூடாது என்று வாதாடினார்.
அதற்கு நீதிபதி சம்பவம் நடந்தபோது அந்த மாணவி மைனர் பெண் ஆவார். அதே நேரத்தில் அந்த மாணவர் 18 வயது நிரம்பிய மேஜர் ஆனவர். அவர் சிறுமியாக உள்ள அந்த மாணவியிடம் உறவு வைத்திருந்ததால் அது கற்பழிப்பு குற்றமாகத்தான் கருதப்படும். மேலும், அதை ஆபாசபடமும் எடுத்துள்ளார்.
எனவே அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டியது உள்ளது. இதனால் அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கிறேன் என்று தீர்ப்பு கூறினார்.
மாணவியும், மாணவரும் ஒன்றாக இருக்கும் 4 ஆபாச படங்களும் மாணவரின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்டு ஆதாரமாக சேர்க்கப்பட்டிருந்தது.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.