11 வயது தங்கையை அம்மாவாக்கிய 14 வயது அண்ணன் - எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பொலிசார்

ஸ்பெயினில் 14 வயது அண்ணனுடன் ஏற்பட்ட தகாத உறவில் 11 வயது சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற்ற நிலையில், குழந்தையானது காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தென் கிழக்கு பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் 14 வயது சிறுவனுக்கும், அவன் தங்கையான 11 வயது சிறுமிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமி கர்ப்பமாகியுள்ளார், இது அவர்களின் குடும்பத்துக்கு தெரியாமல் இருந்த நிலையில் திடீரென வயிறு வலிப்பதாக சிறுமி கூறியுள்ளார்.
இதையடுத்து லா அரிக்சகா மருத்துவமனைக்கு சிறுமிக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
அதே மருத்துவமனையில் ஐந்து நாட்களுக்கு முன்னர் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.இதையடுத்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுமி தன் குடும்பத்தை விட்டு பிரிந்து வளர்ப்பு குடும்பத்தில் தற்போது வசித்து வருகிறார்.
சிறுமியின் பாதுகாப்பு கருதி பொலிசார் இந்த முடிவை எடுத்துள்ளனர்.அதே போல சிறுமிக்கு பிறந்த குழந்தை சமூக ஆர்வலர்கள் மூலம் தற்போது குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான செயலில் ஈடுபட்ட சிறுவன் மீது எந்தவொரு வழக்குப்பதிவும் செய்யப்படவில்லை.
மைனர் என்பதால் ஸ்பெயின் சட்டப்படி சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என பொலிசார் கூறியுள்ளனர்

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.