6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் கைது

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோசைபூர் பகுதியில் பெற்றோர் வேலைக்கு சென்றதால் ஒரு 6 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை அறிந்துகொண்ட அதே பகுதியை சேர்ந்த ஒரு 16 வயது சிறுவன் அந்த சிறுமி இருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளான்.
வீட்டில் யாரும் இல்லாதை பயன்படுத்தி கொண்ட அந்த சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் அங்கு நடந்த விசயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என அந்த சிறுமியை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளான்.
அந்த சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு திரும்பியதும், சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக இதுகுறித்து விந்தியாசல் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார், அந்த சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த சிறுவனையும் கைது செய்தனர்.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.