இன்னும் ஓரிரு தினங்களில் அரசியல் மாற்றம்- ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் நாட்டில்  அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பெறுபேறுகள் வெளியாகிக் கொண்டிருக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல உறுப்பினர்களையும் நேற்று (11) அவசரமாக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
நாட்டில் எந்தக் கட்சியும் எதிர்பாராத விதமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றி பெற்றுள்ளமையானது, ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ ல.சு.க. என்பவற்றிடையே அரசியல் பதற்ற நிலைமையொன்றை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.