எனக்கு பிரதமர் பதவி வேண்டாம் - வெற்றியின் பின் மஹிந்த ராஜபக்ஷ கருத்து

Add caption
எனக்கு பிரதமர் பதவி வேண்டாம், இந்த தேர்தல் முடிவுகளின் பின்னர் செய்ய வேண்டிய எத்தனையோ பணிகள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தாம் நாட்டின் பிரதமர் ஆக விரும்புகிறீர்களா? என தேர்தல் முடிவுகளின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்.
கடந்த 3 வருடங்களாக நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தினால் அடைந்த துன்பம் எத்தகையது என்பதை இந்த தேர்தல் மூலம் எடுத்துக் காட்டியுள்ளனர்.
எதிர்க் கட்சியொன்றுக்கு இருக்க வேண்டிய உரிமைகள் கூட இல்லாத ஒரு நிலையில் இதுபோன்ற வரலாறு காணாத வெற்றியை நாம் அடைந்துள்ளோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்த சகல மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டார். 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.