Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அமைச்சர் ரிஷாடின் ACMC கட்சிக்கு 159 ஆசனங்கள்

Published on Tuesday, February 13, 2018 | 10:19 AM

-ஊடகப்பிரிவு-

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 15மாவட்டங்களில் போட்டியிட்டு சுமார் 150க்கு மேற்பட்டஉறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டது

வவுனியா மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் கிளிநொச்சிபுத்தளம் அனுராதபுரம் மட்டக்களப்பு கொழும்பு ஆகிய 08மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்துயானைச் சின்னத்தில் களமிறங்கியது.

மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் 34ஆசனங்களையும் வவுனியா மாவட்டத்தில் 17 ஆசனங்களையும்முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 ஆசனங்களையும் யாழ்மாவட்டத்தில் 01 ஆசனத்தையும் கிளிநொச்சி மாவட்டத்தில் 02ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 ஆசனங்களையும் கொழும்புமாவட்டத்தில் 02 ஆசனங்களையும் புத்தளம் மாவட்டத்தில் 08ஆசனங்களையும் அனுராதபுரம் மாவட்டத்தில் 04ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது.

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபையையும் மாந்தைமேற்கு பிரதேச சபையையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தனதாக்கிக் கொண்டுள்ளதுஅத்துடன் மன்னார் பிரதேச சபையும்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமாகின்றதுநானாட்டான்பிரதேச சபையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்துஆட்சியமைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

காலாகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்கட்டுப்பாட்டிலிருந்த மாந்தை மேற்கு பிரதேச சபையை மக்கள்காங்கிரஸ் கிறிஸ்தவ இந்து முஸ்லிம் மக்களின் ஆதரவுடன்கைப்பற்றி வடமாகாண அரசியல் வரலாற்றில் ஒரு சாதனையைஏற்படுத்தியிருக்கின்றது.    
வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச சபை செட்டிக்குளம்பிரதேச சபை ஆகியவற்றிலும் அகில இலங்கை மக்கள்காங்கிரஸுக்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சிஅதிகாரங்களைப் பெறக்கூடிய தெளிவான மக்கள் ஆணைகிடைத்துள்ளது.

அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுபிரதேச சபை துணுக்காய் பிரதேச சபை மாந்தை கிழக்கு பிரதேசசபை ஆகியவற்றில் ஏனைய கட்சிகளுடன் இணைந்துஆட்சியமைக்கக் கூடிய சூழல் அல்லது மக்கள் காங்கிரஸின்ஆதரவின்றி பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொண்டகட்சிகளுக்கு ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் நகர சபையிலும் எதிரணிக்குச்சமனான ஆசனங்களைக் கொண்டுள்ளதால் அந்த ஆட்சியையும்வேறு சில கட்சிகளுடன் இணைந்து நிறுவக்கூடிய வாய்ப்புஅதிகம் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்இஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்து மயில் சின்னத்தில்கல்முனை மாநகர சபை சம்மாந்துறை பிரதேச சபை பொத்துவில்பிரதேச சபை இறக்காமம் பிரதேச சபை நிந்தவூர் பிரதேச சபைஅட்டாளைச்சேனை பிரதேச சபை காரைதீவு பிரதேச சபைஆகியவற்றில் போட்டியிட்டதுஅக்கரைப்பற்று பிரதேசசபையில் 01 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்தப் பிரதேசசபைகளில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு சுமார் 40 407வாக்குகள் கிடைத்துள்ளனசம்மாந்துறைப் பிரதேச சபையில் 12 911 வாக்குகளைப் பெற்று 08 ஆசனங்களை தம்வசப்படுத்திபலமான நிலையில் இருக்கும் மக்கள் காங்கிரஸின்ஆதரவிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஆட்சியை அமைக்கக்கூடிய வலுவான நிலை உள்ளது.

அதேவேளை நிந்தவூர் பிரதேச சபையில் 7260 வாக்குகளைப்பெற்று 06 ஆசனங்களுடன் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்துஆட்சியைத் தனதாக்கிக் கொள்ளும் நிலையில் உள்ளது

கல்முனை மாநகர சபையில் 7573 வாக்குகளைப் பெற்று 05ஆசனங்களுடனும் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 4384வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும் பொத்துவில் பிரதேசசபையில் 4288 வாக்குகளைப் பெற்று 04 ஆசனங்களையும்இறக்காமம் பிரதேச சபையில் 2313 வாக்குகளைப் பெற்று 03ஆசனங்களைப் பெற்றுள்ளது.

அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சிசபைகளில் போட்டியிட்ட எந்தவொரு கட்சியும் தனித்துஆட்சியமைக்காத நிலை தற்போது உருவாகியுள்ளதால் சிலசபைகளில் மக்கள் காங்கிரஸின் உதவியின்றி எந்தக் கட்சியும்ஆட்சியமைக்க முடியாத சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது

காரைதீவு பிரதேச சபையில் மக்கள் காங்கிரஸ் 1010வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தைப் பெற்றமைசிறப்பம்சமாகக் கருதப்படுவதுடன் கடந்த உள்ளூராட்சித்தேர்தலில் கல்முனை மாநகர சபையில் நற்பிட்டிமுனைவட்டாரத்தில் ஒரேயொரு உறுப்பினரை மாத்திரம் பெற்றுஅம்பாறை மாவட்ட அரசியலில் கால்பதித்த மக்கள் காங்கிரஸ்கடந்த பொதுத் தேர்தலில் தனித்து மயில் சின்னத்தில் களமிறங்கிசுமார் 33000 வாக்குகளைப் பெற்றமையை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டுஓட்டமாவடி பிரதேச சபையிலும் ஆட்சியமைக்கக் கூடிய நிலைஏற்பட்டுள்ளதுஅதேவேளை காத்தான்குடியில் தனித்துப்போட்டியிட்டு ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியமுன்னணியுடன் சில சபைகளில் இணைந்து போட்டியிட்டு 04ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகரசபைகிண்ணியா பிரதேச சபை தம்பலகாமம் பிரதேச சபைஆகியவற்றில் மக்கள் காங்கிரஸின் உதவியின்றி ஆட்சியமைக்கமுடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் முதன்முறையாக பல்வேறு சபைகளில் தனித்துப்போட்டியிட்டு சுமார் 10500 வாக்குகளுடன் 08 ஆசனங்களைப்பெற்று மலையக முஸ்லிம் அரசியலில் ஒரு திருப்பத்தைஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு நகரசபையில் தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தையும்குருநாகல் மாவட்டத்தில் 05 ஆசனங்களையும் களுத்துறைமாவட்டத்தின் களுத்துரை நகரசபை பேருவளை பிரதேச சபைஆகியவற்றில் தலா ஒவ்வொரு ஆசனத்தையும் பெற்றுள்ளமைகுறிப்பிடத்தக்கது
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved