2000 இராணுவத்தினரை கண்டிக்கு அனுப்புமாறு அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள்

கண்டி மாவட்டத்தில் ஊரடங்கச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் திகன பிரதேசத்தில் மீண்டும் பதற்றநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அங்கு களத்துக்குச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாதுகாப்பு தரப்பினருடன் பேசி பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மெனிக்கின்ன முஸ்லிம் பிரதேசங்களில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு கடமையிலிருந்த பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து, கலகக்காரர்களை விரட்டியுள்ளனர். இந்நிலையில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாதுகாப்பு தரப்பினருடன் நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார்.
இங்கு 200 படையினரே இருக்கின்றனர். ஆயிரக்கணக்கில் வருகின்ற கலகக்காரர்களை எம்மால் கட்டுப்படுத்துவதற்கு எம்மிடம் போதியளவு படையினர் இல்லையென அங்கிருந்த பொலிஸார் கூறியுள்ளனர். உடனே பிரதமரை தொடர்புகொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், வெளி மாவட்டங்களிலும் 2000 இராணுவத்தினரை உடனடியாக கண்டி மாவட்டத்துக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதவிர, அயலிலுள்ள மடவளை பிரதேசத்திலுள்ள தற்போது பதற்றநிலை தோன்றியுள்ளது. அங்கு ஸ்தலத்துக்குச் சென்ற அமைச்சர் அச்சம் நிலவும் பிரதேசங்களில் பொலிஸாரை நிறுத்தி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார். இந்‌நிலையில் முஸ்லிம்கள் மிகவும் அவதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொண்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.