தெமடகொடயில் தீ விபத்து – 9 வீடுகளுக்கு சேதம்

தெமடகொட, மௌலான தோட்டப்பகுதியில் தொடர் வீட்டுத்தொகுதி ஒன்றில் நேற்று (19) இரவு 9 மணியளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
தெமடகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ விபத்தின் காரணமாக உயிராபத்துகள் எதுவும் இல்லாத போதும் தீப்பரவலால் 9 வீடுகள் சேதமடைந்துள்ளன.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.