ஆமர் வீதியில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி


கொழும்பு, ஆமர் வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ​மெசேன்ஜர் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

காரில் பயணித்த கணவன், மனைவி ஆகிய இருவர் மீது மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவ்விடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தில் காயமடைந்த இருவரையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கணவர் உயிரிழந்துள்ளார். 

தெமடகொட பகுதியைச் சேர்ந்த இனசமுத்து என்டனி ராஜ் என்ற 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 

சம்பவம் தொடர்பில் ஆமர் வீதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.