ஜப்பானில் ஏழைகள் பணமில்லாமல் சாப்பிடும் வகையில், புதுவிதமான உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
டோக்கியோ நகரின், ஜின்போசோ மாவட்டத்தில் ‘மிரவ் சோகுடோ’ எனும் உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் சாதாரண ஏழைகள் பணமில்லாமல் சாப்பிடலாம்.ஆனால், ஒரு நிபந்தனை என்னவென்றால் அவ்வாறு சாப்பிடும் ஏழைகள், 50 நிமிடங்கள் உணவு மேசைகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்ய வேண்டும்.
இதனால், உணவு இலவசம் என்பது இல்லை.இதன் காரணமாக, இந்த உணவகத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த உணவகத்தின் நிறுவனர் சிகாய் கோபயஷி, கடந்த 2016ஆம் ஆண்டு இதனை தொடங்கியுள்ளார்.
தற்போது இவர் மட்டும் தான் இங்கு நிரந்தர பணியாளராக இருக்கிறார். ஆகையால், சாப்பிட வரும் ஏழைகள் தான் பணியாளர்களாக செயல்படுகின்றனர்.
ஒரு shift-யில்(4 மணி நேரம்) மட்டும் 500 பேர் இங்கு பணியாற்றுகின்றனர். இது குறித்து உணவகத்தின் நிறுவனர் சிகாய் கோபயஷி கூறுகையில், ‘ஒருநாள் நான் சமைத்த உணவு எனது நண்பர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதுதான் என்னை சொந்தமாக உணவகம் தொடங்க ஊக்குவித்தது. ‘மிரவ் சோகுடோ’ உணவகத்தை திறப்பதற்கு முன்பாக, ஒரு மிகப்பெரிய உணவகத்தில் முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டேன்’ என தெரிவித்துள்ளார்.
Post a Comment