புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த விளக்கமறியலில்

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரரான ஆராச்சிக்கடுவை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகியோரை எதிர்வரும் மே மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மேல்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆராச்சிக்கடுவை பிரதேச சபை செயலாளர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக சிலாபம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கில் பிணை வழங்கும் வேளையில் வாரத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளித்து கையொப்பமிட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
எனினும் 2017 ஆகஸ்ட் மாதத்திலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்கவில்லை என குறித்த இரு நபர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.