புதிய உள்நாட்டு அரசிறை சட்டம் ஏப்றல் மாதம் முதல்...

இதுவரை காலமும் அமுலில் இருந்த சிக்கலான தீர்வைக் கொள்கைக்குப் பதிலாக, எளிமையான சீரான தீர்வைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் புதிய சட்டம் வரையப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
புதிய சட்டம் பற்றி விளக்கிக் கூறும் கருத்தரங்கில் அமைச்சர் இதனை தெரிவத்தார்.. இதனை உள்நாட்டு அரசிறைத் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.
அமைச்சர் புதிய சட்டம் தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் வருமான மட்டம் உயர்ந்த போதிலும் அதற்கு ஏற்ற விதத்தில் வருமான வரி அதிகரிக்கவில்லை. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் வரியின் மூலம் கிடைக்கும் வருமானம் கீழான மட்டத்தில் உள்ளது என தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கும், கல்வி, சுகாதாரம் முதலான துறைகளின் முன்னேற்றத்திற்கும் வரி வருமானம் அத்தியாவசியமானது.
எனவே வரி செலுத்த வேண்டிய சகலரும் வரி செலுத்துவதை சமூக கடமையாகக் கருத வேண்டுமென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர கேட்டுக் கொண்டார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.