Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

UPDATE KANDY NEWS - இன்றிரவு கண்டி நிலவரம் ஒரு பார்வை - VIDEO

Published on Thursday, March 8, 2018 | 7:52 AM

கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து ராணுவம் பீரங்கி கவச வாகனங்களுடன் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதால் நகரின் பெரும்பாலான இடங்கள் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
பெருந்தொகையான இராணுவத்தின் சப்பாத்துக் கால்களுக்குள் கண்டி நகரம் மிதிபட்டு ஒடுங்கிக் கிடக்கின்றது.
இதன்காரணமாக, அங்கு வன்முறை நிலைமைகள் தற்பொழுது (08 ஆம் திகதி) நேரம் இரவு 12.30 மணியளவில் ஓரளவு அடங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும், ஆங்காங்கே சிறு சிறு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவை தொடர்பான வீடியோக்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
நேற்றிரவு (07-03-2018) 10.40 அளவில்  மகாவலி ஹாட்வெயார் என்ற கடை மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நவயலதன்ன மகாவலி ஹாட்வெயார், பிட்டியகெத்தர மர ஆலை மீதும் பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
கார் ஒன்றில் வந்த சிங்கள காடையர்களால் குறித்த நாசகாரச் செயல் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.
அத்துடன் கஸாவத்தை பள்ளிவாசல், எல்பிட்டிய பள்ளிவாசல் மற்றும் பிலிமத்தலாவையில் உள்ள ஒரு வர்த்தக நிலையம் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அதன் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், அக்குரணை பூஜாபிட்டிய வீதியி் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான மர ஆலை தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமைச்சர் ரிஷாட் பதியூதீன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
அத்துடன், நேற்றைய நாளில்  கண்டி மாவட்டம் முழுவதும் இடம்பெற்ற வன்முறைக் காட்சிகள் ஒரே வீடியோவில் இங்கு தரப்படுகின்றது.
(kandy area last night army forces imposed anti violance)
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved