16 பேருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை திங்கள் சபாநாயகரிடம்- முஜிபுர் ரஹ்மான்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் 16 பேருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினரால் தயார் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இதுவரையில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சபாநாயகரைச் சந்தித்து எந்தவகையிலாவது இன்றைய தினத்துக்குள் அப்பிரேரணையை சமர்ப்பிக்க  முயற்சி எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
எது எப்படிப் போனாலும் 16 பேரினதும் நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை நிச்சயமாக சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரேரணைக்கு இதுவரையில் 20 பாராளுமன்ற உறுப்பினர்களே ஒப்பமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தயார் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.