மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதியமைச்சருடனான சந்திப்பு

எம்.ரீ. ஹைதர் அலி
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம் அவர்களை 2018.04.22ம் திகதி நிந்தவூரிலுள்ள பிரதியமைச்சரின் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின்போது இவ்வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பாக பிரதியமைச்சருடன் கலந்துரையாடிய அபிவிருத்திக் குழுவினரால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதில், சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கான முன்னெடுப்புக்களில் பிரதியமைச்சரின் பணிப்புரைக்கமைவாக கட்டிடத் திணைக்களத்தினால் இதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதனை துரித கதியில் நிவர்த்தி தரக்கோரல், இவ்வருடத்திற்குள் சுகாதார அமைச்சினால் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கவுள்ள புதிய அம்பியுலன்ஸ் வண்டிகளில் ஒன்றினை இவ்வைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்ளல், மருத்தவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் ஒருவரை நியமித்தல் (MLT), மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் சுகாதார அமைச்சுக்கு இவ்வைத்தியசாலைக்கு மேலும் வைத்தியர்களை நியமிக்குமாறு கோரியுள்ள சிபாரிசு கடிதத்திற்கமைவாக அதனை துரிதப்படுத்தி வைத்தியர்களை நியமித்தல்.
அபிவிருத்திக் குழுவினரால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களில் எவற்றை இவ்வருடத்திற்குள் சுகாதார அமைச்சினால் இவ்வைத்தியசாலைக்கு பெற்றுத்தரமுடியுமோ அவற்றை பெற்றுத்தருவதற்குரிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும், அத்துடன் இவ்வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பிரதியமைச்சர் இச்சந்திப்பின்போது தெரிவித்தார்.
அத்துடன், இவ்வைத்தியசாலையினை தரமுயர்த்துவது தொடர்பாக அபிவிருத்திக் குழுவினாரால் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இது விடயமாக முன்னெடுக்கப்பட்டுள்ள விடங்கள் தொடர்பாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிய பிரதியமைச்சர் அவற்றினை துரிதப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்தார்.
மேலும், வைத்தியசாலையின் நிலைமையினை கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையிலும், இவ்வைத்தியசாலையினை தரமுயர்த்துவது தொடர்பாக அரச மட்டத்தில் இழுவாரியாகவுள்ள விடயங்கள் தொடர்பாக வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் முஸ்தபா உட்பட அபிவிருத்திக் குழுவினர் ஆளுநருடன் சந்தித்து கலந்துரையாடுவதற்குரிய முன்னெடுப்புக்களை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கொண்டு வருகின்றார்.
பிரதியமைச்சருடனான அன்றைய சந்திப்பின்போது ஆளுநரை தொலைபேசியில் தொடர்புகொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடுவதற்குரிய நேரமும் அடுத்த வாரமளவில் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி முஸ்தபாவின் தலைமையிலுள்ள அபிவிருத்திக் குழுவினர் இவ்வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.