Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மூட்டாள்தனமான மகிழ்ச்சியை பெற முனையும் மஹிந்த அணி – பொன்சேகா

Bublished By Online Ceylon on Saturday, April 7, 2018 | 7:16 AM

கூட்டு எதிர்க்கட்சியினர் மீது ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அரசாங்கத்தின் கூட்டு பொறுப்புக்கு புறம்பாக செயற்பட்டவர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.
பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை எந்த வகையிலும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல.
இதேவேளை, சீக்கிரமாக அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதற்காக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளனர்.
எனவே இது சுயநலம் கருதிய நம்பிக்கையில்லாப் பிரேரணையாக உள்ளது.
மகிந்த ராஜபக்சவும் அவரது குழுவினரும் இந்த பிரேரணையை கொண்டு வந்ததன் மூலம் மூட்டாள்தனமான மகிழ்ச்சியை பெற முயற்சித்தனர் எனவும், அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved