”முஸ்லிம்களை மொத்தமாக கொலை செய்யவேண்டும்” என்ற சிங்கள இனவாத பதிவுக்கு பதிலளிக்காத முகநூல்

இலங்கையில் மதங்களிற்கு இடையே குரோதங்களை பரப்புவதற்கு பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை என 12 சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கை சேர்ந்த 12 சிவில் அமைப்புகள் இது தொடர்பில் பேஸ்புக்கின் பிரதான நிர்வாகிக்கு பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளன.
இலங்கையில் மதங்களுக்கு இடையே குரோதத்தினை பரப்புவதற்கு பேஸ்புக் பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள சிவில் அமைப்புகள் இதனை கட்டுப்படுத்த வேண்டும்.
சமூக தராதரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.
மதங்களுக்கிடையில் குரோதங்களை பரப்புவதற்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்காகவும் பேஸ்புக் இலங்கையில் பயன்படுத்தப்படுவது குறித்து தங்கள் அமைப்பு தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றது என மாற்றுக்கொள்கை நிலையத்தை சேர்ந்த ரைசா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் இனக்குரோதங்களையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் தூண்டும் பதிவுகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதை வரவேற்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளின் போது அனைத்து முஸ்லிம்களையும் கொலை செய்ய வேண்டும் என தெரிவிக்கும் பதிவொன்று சிங்கள மொழியில் பேஸ்புக்கில் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக வௌியாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் இனக்குரோதம் தொடர்பில் ஆராய்ச்சி செய்து அது குறித்த அறிக்கையை பேஸ்புக்கிற்கு அனுப்பி வைத்தோம் ஆனால் உரிய பதில்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இனக்குரோதம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் வௌியாகியுள்ளமை குறித்து நாங்கள் சுட்டிக்காட்டும் போது பேஸ்புக் தரப்பிலிருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
இது குறித்து நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என அவர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.