பேஸ்புக் நண்பர்கள் ஒன்றிணைந்து செய்த மற்றுமொரு சம்பவம் - 19 பேர் கைது

ஹிக்கடுவ வெவல பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(13) அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகமான சிலர் இணைந்து போதைப்பொருள் மற்றும் மதுபான விருந்து நடத்துவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது விஷப் போதைப்பொருள் என கருதப்படும் 16 லொலிபொப்கள், 50 கிராம் கொக்கேய்ன் மற்றும் 9 கிராம் கேரள கஞ்சாவையும் தம்வசம் வைத்திருந்த 4 இளைஞர்களும், 3 யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் மேலதிக விசாரணைக்காக ஹிக்கடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஏனைய 12 பேரும் பொலிஸாரால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் 7 பேரும் நேற்று காலி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணைகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அம்லங்கொடை – கொடகம நிகழ்வு மண்டபத்தினுள் இடம்பெற்ற பேஸ்புக் நண்பர்கள் விருந்தில் கஞ்சா, அபின், ஹசீஸ், மற்றும் போதை மாத்திரைகளுடன் சமூக சீர்கேடுகளில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
பலபிட்டிய நீதவானிடம் பெற்றுகொண்ட ஆணைக்கு அமைய திடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 200 – 250 பேர் அங்கிருந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
குறித்த விருந்தில் பங்கேற்க 3000 ரூபாய் செலுத்தி பற்றுச் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். பற்றுச் சீட்டு பெற்று கொள்ளாதவர்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. சுற்றிவளைப்பின் போது அதிகளவு இளம் பெண்களும் இருந்துள்ளனர்.இவ்வாறான விருந்துகளில் ஆண்களை விட பெண்களே அதிகம் பங்கேற்று வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டிள்ளனர்.
50 பொலிஸ் அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இது குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதேவேளை கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி “பேஸ்புக் ப்ரெண்ட்ஸ்” என தம்மை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்ட ஒரு குழு­வினர் புவக்­பிட்­டிய பகு­தியில் இரு நாட்­க­ளாக இரவு வேளை­களில் நடத்­திய களி­யாட்ட நிகழ்ச்­சியின் ஏற்­பாட்­டாளர் போதைப்­பொருள் தடுப்பு பிரி­வினால் கைது செய்­யப்­பட்­டனர்.
கடந்த 29 மற்றும் 30 ஆம் திக­தி­களில் இடம்பெற்ற இக்­க­ளி­யாட்ட நிகழ்வில் ஈடு­பட்ட இப்­பி­ரி­வினர் போதையில் சுய நினை­வி­ழந்த நிலையில் காணப்­பட்­ட­தா­கவும் போதைப்­பி­ரி­யர்­க­ளிடம் சமூ­கத்தில் பர­வ­லாக பயன்­ப­டுத்­தப்­படும் குளிசை வகைகள் இதன்போது பயன்­ப­டுத்தப்­பட்­டி­ருக்­க­லா­மெ­னவும் போதை தரக்­கூ­டிய பல வெளி­நாட்டு உயர்­தர மது­பான வகைகள் இங்கு கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.
இரத்­தி­ன­புரி–அவி­சா­வளை வீதி­யி­லுள்ள புவக்­பிட்­டிய பகு­தியின் உல்­லாச விடு­தி­யொன்றில் இடம்­பெற்ற இந்த களி­யாட்ட நிகழ்வின் அநா­க­ரிக செயற்­பா­டு­களால் கோப­ம­டைந்த இப்­பி­ர­தேச கிராம மக்கள் இவ்­வி­ட­யத்தை பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு அறி­வித்­த­தை­ய­டுத்து இக்­க­ளி­யாட்ட விடுதி சுற்றி வளைக்­கப்­பட்­டது
அத்­துடன் இங்கு பயன்படுத்தப்பட்ட அதிக விலையுள்ள உத்தரவு பத்திரம் பெறாது விநியோகிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களும் கைப்பற்றப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.