மஸ்கெலியாவில் மண்சரிவு - 8 குடும்பங்கள் இடம்பெயர்வு

மஸ்கெலியா கவரவில தோட்டம் லோவ்கூர்டன் பிரிவில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடுகள் இரண்டு பகுதியளவில் சேதமாகியுள்ளன.
இன்று ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்களும், அத்தொடர் குடியிருப்பில் உள்ள ஏனைய ஆறு குடும்பங்களை சேர்ந்தவர்களும், மொத்தமாக 8 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் தோட்ட வைத்தியசாலையில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் மேலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய தோற்றம் காணப்படுவதால் இப்பகுதியில் காணப்படும் ஏனைய குடியிருப்பாளர்களையும் அவதானத்தோடு இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்மேடு சரிந்து பாதிக்கப்பட்டுள்ள வீடுகளின் உடமைகள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான சலுகைகளை பகுதி கிராமசேவகர் ஊடாகவும், தோட்ட நிர்வாகத்தினூடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.