களனி கங்கை பெருக்கெடுப்பு: மல்வானை - ரக்‌ஷபான பிரதேசம் நீரில் மூழ்க ஆரம்பித்தது..

தொடர்மழையை அடுத்து களனி கங்கை பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது அறிந்ததே.. இந்நிலையில் களனி கங்கையின் மருங்கில் இருக்கும்  மல்வானையின்  ரக்சபான பிரதேசம் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் பிரதேசவாசிகள் ( இன்று காலை 10 மணி) தெரிவிக்கின்றனர்.

களனி கங்கை பெருக்கெடுக்க ஆரம்பித்ததை அடுத்து நீர்மட்டம்  அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் வீடுகளுக்கு உள்ளே 4 , 5 அடிகள் நீர் வந்துள்ளதாகவும் தற்போது வரை ஐம்பதுக்கு அதிகமான வீடுகள் பாதிக்கபட்டுள்ளதகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 இது தொடர்பில் இடர்முகாமைத்துவம் உற்பட பலருக்கும் அறிவித்து வருவதாகவும் வாகனங்கள் வரமுடியாத அளவுக்கு நீர் காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.


Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.