மே 18 யுத்த வெற்றி தினம் : படையினரை கௌரவிக்காதது கவலையளிக்கிறது - மஹிந்த

உயிரை பணயம் வைத்து நாட்டை காத்த படையினரை கௌரவிக்க அரசாங்கம் தவறியுள்ளதாகவும் யுத்தத்தை வெற்றிகொண்ட மே 18 ஆம் திகதி படையினரை கௌரவிக்காமல் இருப்பது தனக்கு கவலையளிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
கடுவெல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 
30 வருடங்களாக நாட்டில் நிலவி வந்த யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. 
எனினும் யுத்த நிறைவுக்கு காரணமாக இருந்த படையினரை கௌரவிக்கவோ அல்லது உயிரிழந்தவர்களை நினைவுக் கூரவே அரசாங்கம் உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.