எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்களின் வித்தியாசமான போராட்டம்

அரசாங்கத்தினால் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இலங்கை பொது மீனவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வித்தியாசமான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
காலி புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்றிரவு (16) பந்தங்களை ஏந்திய நிலையில் ஊர்வலமாக சென்று தமது போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக கோஷமெழுப்பிக் கொண்டு காலி நகரம் முழுவதும் ஊர்வலமாக சென்றுள்ளனர்.
மீனவ தொழில் அபாயத்தில், எரிபொருள் விலையை உடனடியாக குறைத்திடு, மண்ணெண்ணை விலை 130 சதவீதம் அதிகரிப்பால் மீனவர்கள் கடலில் இருந்து தரையில் உள்ளனர்,
மீனவர்களுக்கான மானியங்கள் கரைந்து செல்கின்றன, நன்மைகளும் கரைந்து செல்கின்றன போன்ற கோஷங்களை எழுப்பிய வண்ணம் எதிர்ப்பாளர்கள் தமது ஊர்வலத்தை நடத்தினர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.