இரவில் கடைகளை மூடுங்கள் : காத்தான்குடி பள்ளிவாயல் சம்மேளனம் விசேட அறிவிப்பு

காத்தான்குடியிலுள்ள வர்த்தக நிலையங்களை இரவில் 9 மணி முதல் 10 மணி வரை மூடுமாறு காத்தான்குடி பள்ளிவாயல் சம்மேளனம் அறிவிப்பு
காத்தான்குடியில் புனித ரமழான் நோன்பு மாதத்தில் வர்த்தக நிலையங்களை இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டாயமாக மூடுமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இன்று (16.5.2018) புதன்கிழமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.தௌபீக் மற்றும் பிரதி செயலாளர் எம்.சி.எம்.ஜௌபர் ஆகியோர் கையொப்பமிட்டு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், ஜம் இய்யதுல் உலமா, வர்த்தகசங்கம் மற்றும் வர்த்தகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதை பொதுமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
புனித றமழான் கால அமல்களில் ஒன்றான இரவு நேரத் தொழுகைகளை வர்த்தகர்கள், வர்ததக ஊழியர்கள் அனைவரும் தொழ வேண்டும் என்பதற்காக அனைத்து வர்ததக நிலையங்களையும் இரவு 9:00 மணிமுதல் 10:00 மணிவரை கட்டாயமாக மூடி, சகலரும் இரவு நேரவணக்க வழிபாடுகளில் ஈடுபட ஏற்பாடுகளைச் செய்தல்.
சகல பள்ளிவாயல்கலும் இரவு இஷாத் தொழுகையை 9:00 மணிக்கு ஆரம்பித்து, அதனைத் தொடர்ந்து இரவு நேரவணக்க வழிபாடுகளை நடாத்துதல்.
எனவே மேற்படி விடயங்களை அனைத்து பொதுமக்களும் பின்பற்றி புனித றமழானின் பாக்கியத்தை அனைவரும் அடைந்து கொள்வோமாக என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.