ரமழானில் தேவையான பேரீச்சம் பழங்களை விநியோகிக்க ரணில் உத்தரவு

ரமழான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் மக்களுக்கு தேவையான பேரிச்சம்பழங்களை தேவையான அளவு விநியோகிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் மதவிவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் விடுத்த கோரிக்கைக்கமையவே பிரதமர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கான பேரிச்சம் பழங்களை பள்ளிவாசல்கள் ஊடாக பகிர்ந்தளிக்கப்படும்.இதற்கமைய, கடந்த வருடம் சவூதி அரேபியா இலங்கைக்கு 150 டொன் பேரிச்சம்பழங்களை வழங்கியிருந்ததுடன், சதொச மூலமும் 150 டொன் பேரிச்சம்பழங்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த வருடம் மத்திய கிழக்கு நாடுகளில் பேரிச்சம்பழ உற்பத்திகள் குறைவடைந்துள்ளமையால், குறித்த நாடுகளிலிருந்து இலவசமாக வழங்கப்படும் பேரிச்சம்பழ தொகைகள் குறைவடைந்துள்ளதாகவும், இதனால் சதொச ஊடாக இந்த வருடத்திற்கு தேவையான பேரிச்சம்பழங்களை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கொண்டு வருமாறும் சதொச நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதுடன், பேரிச்சம்பழங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் தலையிடுமாறு கார்கில்ஸ் நிறுவனம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.