இடியுடன் கூடிய கன மழை பெய்யும் சாத்தியம் - மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் கடற்பரப்புகளில் பெய்துவரும் மழை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் குறிப்பாக புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற்பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன், காற்றின் வேகம் மணிக்கு 70 – 80 கிலோ மீற்றர் வரை இருக்கும் எனவும் மின்னல்களினால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதேவேளை, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பனி மூட்டம் காணப்படும் எனவும் வாகன சாரதிகளை வாகனங்களை கவனமாகச் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களையும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் இடி மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.