Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

சவூதியில் நாளை நோன்பு ஆரம்பம் - இலங்கையில் இன்று ரமழான் தலைப்பிறை பார்க்கும் நாள்

Bublished By Online Ceylon on Wednesday, May 16, 2018 | 1:12 PM

சவூதியில் நாளை வியாழக்கிழமை ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது.
இதேவேளை ஜப்பான்,பிலிப்பைன்ஸ்,சிங்கப்பூர்,ஓமான்,மலேசியா கட்டார் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் நாளை நோன்பு ஆரம்பமாகிறது.
இலங்கை, இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் இன்று (புதன்) மாலை பிறை பார்க்கப்படுகிறது. 

கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று  புதன் கிழமை மாலை இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அந்த வகையில், ஹஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு  இன்று (16) மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், இன்று தலைப்பிறை தென்பட்டால் வியாழக்கிழமை முதலாவது நோன்பு ஆரம்பமாகும் எனவும் இன்று பிறை தென்படாவிட்டால் ஷஃபான் மாத்தை 30 ஆக பூர்த்தி செய்துவிட்டு நாளை மறு தினம் (வெள்ளிக் கிழமை) நோன்பு நோற்க வேண்டும் எனவும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved