பெருநாள் சர்ச்சைக்கு தீர்வு: நாட்டில் எங்காவது வியாழன் பிறை தென்பட்டால் வெள்ளி பெருநாள் வரும் சாத்தியம் உள்ளது - அஷ்ஷேஹ் ரிஸ்வி முப்தி

(வியாழன்) பிறை தெரிந்தால் வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாட வேண்டி வரலாம் என்று அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலை அஷ்ஷேஹ் றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.

நாட்டில் எங்காவது பிறை கண்டதாக இரண்டு பேர் சாட்சி சொல்வார்கள் என்றிருந்தால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) பெருநாள் எடுக்க வேண்டி ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த மே மாதம் 18 ஆம் திகதி  புனித நோன்பு ஆரம்பமானது. இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை பெருநாள் எடுக்க வேண்டி வந்தால் பிடித்த நோன்புகள் 28 ஆகவே அமையும்.

நோன்பு 28 உடன் நிறைவடைந்தால் ஒரு நோன்பை கழாச் செய்ய வேண்டும் என்பது சன்மார்க்கச் சட்டமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் பிறை தேடவேண்டிய நாள் எதிர்வரும் வெள்ளிக் கிழமை (15) என்றும் அத்தினம் பிறை தென்பட்டால் சனிக்கிழமை (16) பெருநாள் கொண்டாட வேண்டும் எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

கொள்ளுப்பிடியில் நேற்று(08) இடம்பெற்ற ஜும்ஆ பிரசங்கத்தின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.