பொதுபல சேனா தேரர்களின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம்..

வீரகேசரி நாளிதழில் 16.06.2018 அன்று பொதுபலசேனா அமைப்பின் செயலாளரை கைது செய்து சிறைக்கு அனுப்பியது முஸ்லிங்களுக்கு பெருநாள் பரிசாகும் எனும் கருத்து வெளியிடப்பட்டிருந்தது. அது வீரகேசரி நாளிதழின் கருத்தா இல்லை அது யாரின் கருத்து என நாம் அறிய வேண்டும்.

பொதுபலசேனா அமைப்பின் சார்பில் அவர்களால் நடாத்தப்பட்ட ஊடக சந்தில் தெரிவிக்கப்பட்ட கருத்தை வீரகேசரி கடந்த 16.06.2018 அன்று தனது தலைப்பு செய்தியாக வெளியிட்டிருந்தது.அதனை நுனிப்புல் மேய்ந்த நாம் வழமைபோன்று வாயுநிறப்பிய சோடா போத்தலாக பொங்கிகொண்டு இருக்கிறோம். 

அந்த கருத்தை கூறிய குறிப்பிட்ட தீவிரவாத போக்குடைய பொதுபலசேனா அமைப்பை சுட்டிக்காட்டி கருத்தை பதிவு செய்ய வேண்டிய நாம் அதனை செய்யாது அந்த செய்தியை வெளியிட்ட ஊடகத்தை கண்டிக்க முயல்வது முட்டாள் தனமான ஒன்றாகும்.

வீரகேசரி நிர்வாகம் அந்த செய்தியை ஊடக தர்மம், சமூக பொறுப்பு என்பன இல்லாது தெளிவில்லாத தலைப்பை இட்டு மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பத்திரிகை என்பதை நிறுவிக்க முயன்ற ஒரு செயலாகவே இதனை நாம் நோக்கலாம். 

பொதுபலசேனா அமைப்பின் கருத்தை வெளியிட்ட வீரகேசரி பத்திரிகைக்கு எதிர்ப்பை காட்ட முயலாமல் அந்த கருத்தை முஸ்லிங்கள் புனிதமான தினமாக கொண்டாடும் புனித நோன்பு பெருநாள் தினத்தில் கூறிய பொதுபலசேனா அமைப்பை கண்டிக்க வேண்டும்.

அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்குபொதுபலசேனா அமைப்புடன் மிக நெருங்கிய உறவை கொண்டிருக்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் எங்கள் சமூகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அலங்கரிக்கும் முஸ்லிம் நபர்கள் இந்த விடயத்தை எடுத்து கூறி இவ்வாறான சர்ச்சை இனிமேலும் நடக்காமல் பாதுகாக்க வேண்டும். 

இந்த கருத்தின் மூலம் அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் ஒருவிதமான இனவாத தூண்டுதலை உருவாக்கி நாட்டின் இறையாண்மை மற்றும் சமூக ஒற்றுமை என்பவற்றை சீர்குழைத்து நாட்டை மீண்டும் யுத்த பூமியாக மாற்ற முடியும் என திட்டமிட்டு அரங்கேற்றப்படும் வெளிநாட்டு சதிகளை முறியடிக்க வேண்டிய அவசியம் இப்போது உள்ளது. 

இந்த விடயத்தை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் , எம்பிக்கள் முஸ்லிம் கட்சிகள் என்பன ஒன்றிணைந்து உரிய நேரத்தில் உரிய தரப்பினருக்கு எடுத்து கூறி இனிமேலும் இந்த நிலை தொடர அனுமதியாது செயட்பட வேண்டும். 

நூறுல் ஹுதா உமர்
தவிசாளர்
அல்-மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.