புத்தளம் நாசமாகிறது!!! ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.

ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன. 
அனைவரும்(99%) நமது முஸ்லிம்கள். 
புத்தளத்தில் தான் தப்லீக், தௌஹீத், இக்வான், ஜமாஅதுல் இஸ்லாம் அனைத்தும் செறிந்து பரவலாக வியாபித்திருக்கின்றன, மிக முக்கியமாக நேற்று போதை ஒழிப்புத்தினமாக பிரகடணம் செய்த புத்தளம் ஜம்இய்யதுல் உலமா, புத்தளம் பெரிய பள்ளிவாயல், ஜமாஅதுல் இஸ்லாம் இவ்வனாச்சாரக் கச்சேரியைக் கண்டும் இடமளித்து மௌனித்திருப்பது ஏன்??? 
நம் நகரத்தை பாழ்படுத்தி, இஸ்லாத்தை குழி தோன்றி புதைத்து, அன்னியவர்களால் எமது பெண்கள் ரசிக்கப்பட்டு சிலபோது அவர்களது கற்புக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்களும் ஏற்படலாம்! அல்லாஹ் பாதுகாப்பானாக
ஒரு மாத காலம் பக்குவத்துடன் நோன்பு நோற்று இராக் காலங்களில் நின்று வணங்கி இறைவனை நெருங்கிய எமது நன்மைகள் ஒரு சில வினாடிகளில் பறிபோகும் காட்சிகளே இவை! இவை உண்மையில் ரமழானை வணங்கினோமா அல்லது அல்லாஹ்வை வணங்கினோமா என்பதை பறைசாற்றும் அனாச்சாரங்கள்!!!
அதிகாரமுள்ள புத்தளம் நகரபிதா கௌரவ K.A. பாயிஸ், மற்றும் புத்தளம் பெரிய பள்ளிவாயல் இவற்றை முறையாக வரையறுகளுக்குட்பட்டவாறு ஏற்பாடு செய்யலாமே! அல்லது அனாச்சாரங்கள் அரங்கேறாமல் இவற்றைத் தடுக்கலாமே!
பொறுப்பாளர்கள், தங்களது பொறுப்பைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவதை சற்று பயந்து செயற்படுவது காலத்தின் தேவையாகும். இஸ்லாமே எமது உயிர் நாடி என்று மூச்சுக்கு பல விடுத்தம் பேசு உங்களது வகிபாகம் எங்கே!!! 
களியாட்டத்தை இஸ்லாம் தடைசெய்யவில்லை, ஆனால் அவை அதன் வரையறைகளுக்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.நட்புடன் 
அ(z)ஸ்ஹான் ஹனீபா 17/06/2018

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.