ஞானசாரருக்கான தண்டனை குறித்து, வருந்துவதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாது

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து வருந்துவதாக பிரதி நீதி, பொதுநிர்வாக அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

பிட்டகோட்டேவில் அமைந்தள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீதி தேவதை கண்களை மூடிக் கொண்டிருப்பதனால் நபரை பார்த்தன்றி சம்பவத்தைக் கருத்திற் கொண்டே தண்டனை விதிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு செய்யாது என்ற காரணத்தினால், வருந்துவதனைத் தவிர வேறும் எதனையும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.