"பிறை குழப்பம்" நடவடிக்கைக்கு தயாராகிறது முஸ்லிம் சமய விவகார திணைக்களம்

பிறை விவகாரத்தில் முஸ்லிம சமய விவகார திணைக்களம் எதிர்வரும் காலங்களில் கூடிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள இருப்பதாக அமைச்சர் ஹலீம் தெரிவித்தார். 
இதுபற்றி அமைச்சர் ஹலீம் தெரிவிக்கையில், 
 பிறை விவகாரத்தில் நாட்டு முஸ்லிம்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு முகம்கொடுத்திருப்பதை உணரமுடிகிறது. அந்தவகையில் நடந்த விசயங்கள் பற்றி ஆராய்ந்து, எதிர்வரும் காலங்களில் இதுபற்றிய குழப்பங்களை தவிர்ப்பதற்கு நாங்கள் முயற்சிப்போம். 
பிரேத பரிசோதனை செய்வது போன்று, நடந்துமுடிந்த குழப்பங்கள் தொடர்பில் எமது செயற்பாடுகள் தொடரும், தேவைப்படுமிடத்து பிறை கண்டவர்களை அழைத்து வாக்குமூலம் பெறவும் திட்டமிட்டுள்ளோம். 
இன்னும் சில யோசனைகளும் எம்முன் உள்ளன. பிறை தொடர்பில் அவற்றை நடைமுறைப்படுத்தி குழப்பங்கள், அமைதியின்மை போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.