புத்தளம் கார்னிவல் நிகழ்வுகளின் சூதாட்ட நிகழ்ச்சிகள் நிருத்தப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்!!! 
( அஸ்மின் கான்)
புத்தளத்தில் நடந்து கொண்டிருக்கும் கார்னிவல் நிகழ்வுகளிலே எமது கலாசாரத்தை குலைக்கும் முகமாக கொண்டுவரப்பட்ட கெசினோ சூதாட்டத்தை புத்தளத்து இளைஞர்கள் ஒன்றினைந்து பெரியபள்ளி ஒத்துழைப்போடு இல்லாதொழித்தனர்.
நேற்று 2018.06.19 அன்று பெரிய பள்ளியில் குறித்த கழகங்களான Hyperz Student Club , Silent Volunteers , Casmo , Zahirians 12 , Zahirians 15(OL) ,Zahirians 16(OL) ,Zahirians 17 ,IDORZ ,Helping wings ஆகிய கழகங்களை சார்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றினைந்து பெரிய பள்ளிக்கு குறித்த சூதாட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கொடுக்கப்பட்ட மஹஜரை அடுத்து பெரிய பள்ளி நிருவாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட தரகரான ஜே.எஹியா அவர்களை வரவழைத்து குறிப்பிட்ட பிரச்சினையை தெளிவுபடுத்தியதும் சமூகத்துக்காக உடனடியாக குறித்த அந்த சூதாட்டத்தை எந்த ஒரு மறுப்புமின்றி நாளை முதல் நிறுத்திவிடுவோம் என வாக்களித்துச்சென்றார்.
இந்த நிகழ்வில் கலந்து இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நகர சபை உறுப்பினர்களான றஸ்மி மற்றும் அஸ்கின் ஆகியோர் முக்கிய காரணமாவார்கள்.
 எனவே அவர்களுக்கும் ,பெரிய பள்ளி நிருவாகத்திற்கும் ,நகர சபைக்கும் ,எஹியா அவர்களுக்கும் புத்தளத்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாகவும் ,குறித்த கழகங்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இளைஞர்களின் இந்த வெற்றியானது எம் ஒட்டுமொத்த புத்தள சமுகத்தின் வெற்றியாகும்..
 இது இத்தோடு நின்று விட போவதில்லை. தொடரும் எம் பயணம்...News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.