ஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்

மெதிரிகிரிய கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறை தீர்ப்பதற்கு சென்ற இரு ஆசிரியர்கள், மாணவன் ஒருவனை தடியாலும், கையாலும் தாக்கியதால் காயமுற்ற மாணவன் மெதிரிகிரிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 
 இந்த மாணவனை தாக்கிய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 
அத்துடன், ஏனைய ஆசிரியரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மாணவனின் கையிலும், காலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. 
 இந்தப் பாடசாலையில் 12 ஆம் தரத்திலும் 13 ஆம் தரத்திலும் கல்வி கற்கும் மாணவர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதன்போது, அங்குசென்ற துணை அதிபர் இந்த மோதலை தீர்த்து மாணவர்களை தங்களின் வகுப்பறைகளுக்கு அனுப்பியுள்ளார். 
சிறிது நேரத்தில் 13 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனை பாடசாலை அதிபரின் அறைக்கு அழைத்துள்ளனர். இந்த மாணவன் அதிபரின் அறைக்கு செல்லும் வழியில் வேரொறு ஆசிரியர் இந்த மாணவனை தும்புத்தடியால் தாக்கியுள்ளார். 
மேலும், இன்னொரு ஆசிரியரும் கையால் இந்த மாணவனை தாக்கியுள்ளார். கைது செய்யபட்ட ஆசிரியர் நேற்று ஹின்குரக்கொகொடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.