TNTJ மாநில பொதுச் செயலாளர் செய்யத் இப்றாஹிம் அதிரடி நீக்கம் - தகவல் & Video உள்ளே

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில தலைவர் அல்தாபி அவர்களின் பாலியல் குற்றச்சட்டு சம்பந்தமாக போலி முகவரியில் முகநூலில் எழுதவைத்த குற்றச் சாட்டின் பேரில் அவ் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் செய்யத் இப்றாஹிம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் அவ் அமைப்பின் மாநில தலைவர் பீ.ஜெய்னுல் ஆப்தீன் பாலியல் குற்றச் சாட்டில் நீக்கப்பட்ட நிலையில் பொதுச் செயலாளரின் அதிரடி நீக்கம் தொண்டர்கள் மத்தில் பாரிய பரபரப்பையும் மிகுந்த மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக ஜமாஅத் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

த.த.ஜ உத்தியோகபூர்வ அறிக்கை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ரியாத் மைதீன் காரணமாக செய்யது இப்ராஹீம் TNTJ பதவியிலிருந்து நீக்கப்பட்டார்
(Video News)
https://youtu.be/ae5ogR2xMWg

முக்கிய அறிவிப்பு:

பக்கீர் முஹம்மது அல்தாஃபி மீது நிரூபணமான பாலியல் குற்றச்சாட்டு வெளியுலகிற்கு பரவலாக தெரிய காரணமாக இருந்தவர்களில்  ரியாத் மைதீனும் ஒருவர்.

அந்த ரியாத் மைதீன் யார் என்பது புதிராகவே இருந்தது.

இந்நிலையில் இன்று (07.06.18) மாலை மேலாண்மைக்குழுவிற்கு ஒரு புகார் மனு வந்தது.

அல்தாஃபி சம்பந்தமாக மேலாண்மைக்குழு தலைவர் அப்துந்நாசரிடம் ரியாத் மைதீன் என்ற பெயரில் பேசியது நான் தான் என்றும், இவ்வாறு என்னை பேசச் சொன்னது  சையது இப்ராஹீம் தான் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனடியாக இது குறித்து சையது இப்ராஹீமிடம்  விசாரித்த போது அவர் அதை ஒப்புக்கொண்டார்.

அவரது வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில நிர்வாகியின் மீது உயர்நிலைக்குழு தான் நடவடிக்கை எடுக்க முடியும்  என்பதாலும்

 உடனடியாக  உயர்நிலைக்குழு கூட இயலாததாலும்

உயர்நிலைக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து சையது இப்றாஹிம் நீக்கி நடவடிக்கை  எடுக்கப்படுகிறார்.

அடுத்து கூடவுள்ள  உயர்நிலைக்குழுவில் அவர்மீதான இறுதி நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

அதுவரை பிரச்சாரத்திற்கு அவர் பயன்படுத்தப்பட மாட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

துணை பொதுச்செயலாளர் தவ்பீக் அவர்கள் பொதுச்செயலாளர் பொறுப்பு வகிப்பார்.

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,

மாநிலத் தலைவர்
ஆர்.அப்துல் கரீம்

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.