எரிபொருள் விலை அதிகரிப்பு: பெற்றோல் 145 ரூபாய், டீசல் 118 ரூபாய்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மூலம் விநியோகிக்கப்படும் எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவலகள் தெரிவிக்கின்றன.
இந்த வகையில் 92 ஒக்டேன் ரக பெற்றோல் ஒரு லீட்டர் 8 ரூபாவினாலும் 94 ஒக்டேன் ரக பெற்றோல் 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சாதாரண பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 145  ரூபாவாகவும், சிறப்பு பெற்றோல் ஒரு லீ்ட்டரின் விலை 155 ரூபாவாகவும் அதிகரிக்கின்றது.
சாதாரண டீசல் ஒரு லீட்டர் 9 ரூபாவினாலும்,  சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லீட்டர் டீசலின் புதிய விலை 118 ரூபாவாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் 2 ஆவது முறையாக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பாக இது காணப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் அதிகரிப்பைத் தொடர்ந்து போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டன.
கடந்த மே 11 ஆம் திகதி கடைசியாக எரிபொள் விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.