ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ச குடும்பத்தில் இல்லை! பசில் அதிரடி அறிவிப்பு!

கூட்டு எதிரணியின் தரப்பில் இருந்து இலங்கை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மாறுபட்ட கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
கூட்டு எதிரணியின் தரப்பில் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், அதிபர் தேர்தலில் எதிரணியின் வேட்பாளர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கே அவர் இந்தப் பதிலை அளித்திருக்கிறார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது, என்னிடம் அத்தகைய ஜனாதிபதி கனவு இல்லை. பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.
அது அவர்களின் சுதந்திரம்.தகுதியான பலர் இருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது. நீங்கள் குறிப்பிட்ட பெயர்களைத் தவிர வேறு பல பெயர்களும் உலாவுகின்றன.
அவர்களில் ராஜபக்ச குடும்பத்தைச் சேராதவர்களும் உள்ளனர். அதனை நான் வெளிப்படையாக கூற விரும்பவில்லை. அதிபர் வேட்பாளர்கள் குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்கிறேன்.அதுபற்றி மகிந்த ராஜபக்சவே முடிவு செய்வார்.
அனைவருடனும் கலந்துரையாடி இறுதியான முடிவை எடுக்கும் எடுக்கும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.