மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது Video

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது.இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில், ஏற்கனவே நடந்து முடிந்த T20 தொடரில், இந்தியா அணி 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.இதைத் தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.இதில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன.இந்நிலையில், கோப்பையைத் தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இந்த போட்டியின் Highlights வீடியோ இதோ…
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.