Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

முசலிப் பிரதேசத்தில் உயர்கல்வி நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக கடன் கோரி பிரதமருக்கு கடிதம்

Published on Thursday, August 23, 2018 | 10:38 PM

ம/ முசலிப் பிரதேசத்தில் உயர்கல்வி நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக கடன் கோரி கெளரவ பிரதமருக்கு  அனுப்பப்பட்ட கடிதம் 

Request a Loan to construct a Higher Education Centre in M/ Musali
_____________

இஸ்ஸதீன் றிழ்வான் 
மறிச்சிக்கட்டி, 
மன்னார்
20/08/2018

கெளரவ பிரதமர்
பிரதம அமைச்சர் அலுவலகம்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
அல‌ரி மாலிகை 
கொழும்பு - 03
Tel: (+94) 11 2 321406
Fax: (+94) 11 2 321406

விடயம்: முசலியில் உயர்கல்வி நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக கடன் கோரல்

கவனிப்பாரற்றுக் கிடக்கும் குக்கிராமங்களை தத்தெடுக்கும் விடயங்கள் தொடர்பான வேலைத்திட்டங்கள், ஆலோசனைகள் அடங்கிய கடிதமொன்றை கடந்த வருடம் மேன்மைதகு ஜனாதிபதி அவர்களின் கத்தார் நாட்டு விஜயத்தின் போது அவருக்கு நேரடியாக சமர்பித்த அதேநேரம் மன்னார் முசலிப்பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான புதியதொரு திட்டமொன்றை இக்கடிதம் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவதில் சந்தோசமடைகின்றேன். 

வடமாகாணம் என்பது 30 வருட கால யுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு அனைத்தையும் மீள்நிர்மாணிக்கும் நிலையில் அங்குள்ள மக்கள் அகதி முகாம்களிலிருந்து மீண்டும் தங்களது சொந்த நிலங்களுக்கு மீண்டுகொண்டிருக்கும் நேரத்தில் இம்மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றன‌ மிகப்பெரிய சவாலாக இருந்துவருகிறது.

வடக்கு மக்கள் குறிப்பாக முசலிப் பிரதேச மக்களின் கல்வியை உயர்த்துவதன் மூலம் ஏனைய விடயங்கள் தானாக உயர்வுபெறும் என்ற சிந்தனைக்கேட்ப‌ உயர்கல்வி நிலையமொன்றை ஸ்தாபிப்பதுதான் ஒரே தீர்வு என்ற அடிப்படையில் இந்த வேண்டுதலை முன்வைத்திருக்கின்றேன். 
யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் முசலி மக்களின் கல்வி குறித்த எழுச்சி கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இந்த அரசு இதுதொடர்பாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள‌ வேண்டும் என்பது எனது அன்பான கோரிக்கையாகும்.

தேசிய மட்டத்தில் இளைஞர், யுவதிகள் பயனடையும் விதத்தில் முசலிப் பிரதேசத்தில் மேற்படி உயர்கல்வி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தகுதியான காணி ஒன்றை ஒதுக்கும்படியும் அதனை முழுமையாக கட்டிமுடிப்பதற்கு போதிய நிதியை 10 வருடத்திற்குள் மீள் செலுத்தும் வகையில் கடனாக தரும்படியும் தயவாய் வேண்டிக்கொள்கிறேன். 

உயர்கல்வி நிலையம் நிர்மாணிப்பது தொடர்பான மேலதிக ஆலோசனைகள், முன்மொழிவுகளை வழங்கி அதுபற்றி விரிவாக கலந்தாலோசிப்பதற்கு நேரமொன்றை ஒதுக்கித்தரும்படியும் இத்தால் வேண்டி முடிக்கின்றேன். 

நன்றி
இப்படிக்கு
இஸ்ஸதீன் றிழ்வான்
email: rila27@gmail.com
Call / WhatsApp: 00974 70599004

பிரதிகள்/ CC to:
கௌரவ Dr.விஜேதாச ராஜபக்க்ஷ‌ (பா.உ.), உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள்

கௌரவ ரிஷாட் பதிஉத்தீன் (பா.உ.), கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு

கௌரவ அகில விராஜ் காரியவசம் (பா.உ.), கல்வி அமைச்சர்

கௌரவ வே. இராதாகிருஷ்ணன் (பா,உ), கல்வி இராஜாங்க அமைச்சர்
நண்பர்களுக்கு பகிரவும் :

0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved