முல்லைதீவில் மாணவி கடத்தி கற்பழிப்பு - இ. பாராளுமன்ற உருப்பினர் கைது

முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பெயரில் கிளினொச்சி இளைஞர் பாராளுமனற் உருப்பினர் கந்தையா விஜயரூபன் (26) கைது செய்யப்பட்டுள்ளார். 
முல்லைத்தீவின் பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரப் பரீட்சை எழுதிவரும் 19 வயதுடைய மாணவியே பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வாகனமொன்றில் கடத்தி செல்லப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியை பளைப் பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு உடையார்கட்டுப் பகுதியில் இறக்கி விட்டுள்ளார்.
இதனையடுத்து, மாணவி நடந்த சம்பவத்தை தாயாரிடம் முறையிட்டுள்ளார். குறித்த மாணவியுடன் தாயார் பொலிஸ் நிலையம் சென்று நடந்த சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளார். ஏற்கனவே குறித்த தாயார் பரீட்சை எழுதச் சென்ற மகளை காணவில்லை என்று முறைப்பாடொன்று மேற்கொண்டிருந்தார்.
இதன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே சந்தேக நபரான இளைஞர்பாராளுமன்ற உருப்பினர் கந்தையா விஜயரூபன் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

  1. குற்றவாளி என்பது உறுதியானால் ஆண் குறியை வெட்டி விடுவதே இது போன்ற குற்றச் செயல்கள் இனியும் நடவாது தடுக்க உதவும்.

    ReplyDelete

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.