கிராமசக்தி மக்கள் கழகம்

2030ம் ஆண்டளவில்  வறுமையற்ற தேசத்தை உருவாக்கும் இலக்குடன் இலங்கையின் அரச தலைவரின் "நிலைபேறான அபிவிருத்தி"என்ற  எண்ணக்கருவுக்கமைய அவரது வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையில் கிராம சக்தி மக்கள் அமைப்பினை மாவட்டந்தோறும் கிராமசேவையாளர் பிரிவு ரீதியாக உருவாக்கி வருகின்றார்கள்.

இந்த அமைப்பின் முதலாவது கட்டமாக இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 1000 கிராமசேவையாளர் பிரிவுகளில் கிராம சக்தி மக்கள் சங்கங்களை நிறுவி வருகின்றார்கள்.
இச்சங்கங்கள் கம்பனி சட்டத்தின் கீழ் பதிவாளர் திணைக்கழகத்தில் பதிவு செய்யப்படவுள்ளது. 

இலங்கையின் அரசதலைவரின் நேரடி மேற்பார்வையில் அவரது அரச தலைவர் பணியகத்தின் ஊடாக மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாகவே இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த இருக்கின்றமை பெரிதும் வரவேற்கத்தக்கது.இதன் பயனாக வீண் தாமதங்கள்,அலைச்சல்கள் தவிர்க்கப்படுமென்பது முக்கியமானது.

அந்தவகையில்  யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள கோப்பாய் பிரதேச செயலகம் 35 கிராமசேவையாளர் பிரிவுகளை கொண்டுள்ளது.

இந்த 35 கிராமசேவையாளர் பிரிவிற்குள் மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளை இத்திட்டத்திற்குள் இணைத்துள்ளார்கள்.அதில் எமது ஊரையும் பகுதியளவில் உள்ளடக்கிய இருபாலை தெற்கு(J/257) கிராம சேவையாளர் பிரிவும் ஒன்றாகும்.இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 1000 கிராமசேவையாளர் பிரிவுகளில் எங்கள் ஊரையும் உள்ளடக்கிய கிராமசேவையாளர் பிரிவும் ஒன்று என்பது எம்மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

நீர்வேலி வடக்கு,அச்சுவேலி மேற்கு கிராம சேவையாளர் பிரிவுகள் ஏனைய இரண்டுமாகும்.

கிராமசக்தி செயற்திட்டத்தின்படி இம் மக்கள் சங்கத்தில் இக்கிராம சேவையாளர் வதியும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அங்கத்தவராக முடியும்.அவ் அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தலா 8000 ரூபா வீதம் நிதி ஒதுக்கப்பட்டு மேற்படி மக்கள் சங்கத்தின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடுவார்கள்.எமது கிராமசேவையாளர் பிரிவில் 2600க்கும் மேற்பட்டவர்கள் அங்கத்தவராக தகுதி பெற்றவர்கள்.எல்லோரையும் இணைத்து 20 மில்லியனுக்கு மேல் நிதியினைப் பெற முடியும்.இதன் மூலம் கிராம அபிவிருத்தியினை முன்னேற்றகரமாக கொண்டு செல்ல முடியும்.

அந்நிதியில் 50 வீதத்தினை வாழ்வாதார அபிவிருத்திக்கும்,
30 வீதத்தினை உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கும்,
மிகுதி 20 வீதத்தினை இயலளவு அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தக் கூடியதாகவுள்ளது.

இக் கிராமசக்தி மக்கள் சங்கத்திற்கான நிர்வாகத் தெரிவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது.இவ் நிர்வாகத்தில் 60 வீதமானவர்கள் பெண்களாக இருக்க வேண்டுமென்பது கட்டாயமானது.

அவ்வேளை இச்சங்கத்தின் தவிசாளர்(தலைவர்) பதவிக்கு அங்கு கலந்து கொண்ட மக்கள் அனைவரும் ஏகமனதான முன்மொழிய நாம் தெரிவாகி இருந்தோம்.

எனினும் புதிய சுற்றுநிருபத்திற்கு,
(PS/SD/GS/PB/53-1) அமைய உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இச் சங்க பதவியில் இருத்தல் ஆகாது.
என்பதனைக்கருத்தில் கொண்டு புதிய தவிசாளர் தெரிவு நேற்றைய தினம் மீண்டும் நடைபெற்றது.

புதிய கிராமசக்தி மக்கள் சங்க நிர்வாக குழு விபரம்

தவிசாளர்(தலைவர்)-திரு.மு.தவசீலன்

உபதலைவர்-திருமதி.அஜிதா அன்பரசன்

செயலாளர்-திரு.பா.பிரதீபன்

உபசெயலாளர்-திருமதி.றெஜீனா

பொருளாளர் திரு.க.வித்தியானந்தன்

குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொரு திட்டத்திற்கும் அத்துறை தவிசாளராக செயற்படுவார்கள்

01)வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்புக்குழு
தவிசாளர்-திருமதி.பவித்திரா தனபாலசிங்கம்

02)கிராமிய சேமிப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்குழு
தவிசாளர்-திருமதி.அனித்தா

03)நிதி மற்றும் கொள்வனவுக்குழு
தவிசாளர்-திருமதி.ரூசா

04)உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்குழு
தவிசாளர்-திருமதி.சுகுணா

05)சமூக கணக்காய்வுக்குழு
திரு.ச.துஸ்யந்தன்

பிரதான அமைப்பாளர்(போஷகர்)-திரு.இ.இலட்சுமிகாந்தன்

திரு.மு.தவசீலன் தலைமையிலான சிறந்த அனுபவமுள்ள திறமையானவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.இம் மக்கள் சங்கம் திறம்பட செயற்பட்டு எமது கிராமத்தை முன்னேற்ற வேண்டும்.வாழ்வாதாரங்கள் மேம்படவேண்டும்.குறிப்பாக உட்கட்டமைப்பு துறையில் வரும் வீதிகள்,சிறு வீதிகள்,மதகுகள்,பாலங்கள் புனரமைப்பு செய்யப்படவேண்டும்.
"ஒரே கிராமம் ஒரே மக்கள்"என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் செயற்பட்டு இக்கிராம மக்கள் சக்திமிக்கவர்கள் என்பதனை நிரூபிப்போம்.

கிராமசக்தி திட்டம் வெற்றி பெற இறையருள் ஆசி வேண்டி பிரார்த்திப்போடு இக்குழுவில் அர்ப்பணிப்போடு இணைந்துள்ளவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

"நல்லதே நடக்கும்"

நன்றி.

நடேசபிள்ளை கஜேந்திரகுமார்
வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர்(22ம் வட்டாரம்)

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.