ஜனாதிபதி கொலை சதி முயற்சியின் பின்னால் அர்ஜுன் மஹேந்திரன்?

பயங்கரவாத தடுப்புப் பிரிவில் பொறுப்பாளராக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா முன்னெடுத்ததாக கூறப்படும் ஜனாதிபதி கொலை சதி முயற்சியின் பின்னால், முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்தரன் இருப்பதா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக உண்மையைத் தேடும் ஆய்வாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி பிரேமநாத் சீ. தொலவத்த தெரிவித்தார்.
அவ்வமைப்பினால் நேற்று (18) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
ஜனாதிபதிக்கு அடுத்ததாக தலைமைப் பதவிக்கு வர இருப்பவர் பிரதமர் ஆவார்.
பிரதமரைத் தலைவராக கொண்டுவர வேண்டிய தேவை அர்ஜுன் மஹேந்திரனுக்கு இருப்பதாக கருதுவதற்கு போதியளவு இடம்பாடு உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.