காதுக்குள் மறைந்திருந்த கரப்பான் பூச்சி

வியட்நாமில் காது வலிக்காக மருத்துவமனை சென்ற பெண்ணின் காது பகுதியில் கரப்பான் பூச்சி மறைந்திருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமில் Hai Duong பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சில நாட்களாகவே காது வலி இருந்துள்ளது.
இதனால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டார். அங்கு எண்டோஸ்க்கோப்பின் உதவியுடன் மருத்துவர் பரிசோதனை மேற்கொள்ளும் போது, காதின் உட்பகுதியில் கரப்பான் பூச்சி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பின்னர் அதனை மருத்துவர் காதிலிருந்து நீக்கினார்.  இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், கரப்பான் பூச்சி காதுக்குள் எப்படி சென்றது என தெரியவில்லை. ஒருவேளை நான் உறங்கிக்கொண்டிருக்கும்போது சென்றிருக்கலாம் என கூறியுள்ளார்.
கரப்பான் பூச்சி சிறிய உருவத்தில் இருப்பதால், அது தன்னுடைய உடலை இன்னும் சிறிதாக மாற்றிக்கொண்டு உள்ளே சென்றிருக்கும் என மருத்துவர் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.