Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மஹிந்த அறிவிக்க வேண்டும் - ஜி.எல்.பீரிஸ்

Published on Tuesday, September 18, 2018 | 7:09 AM

பா.நிரோஸ்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவதற்கு, எந்தவிதமான சட்டச் சிக்கலும் இல்லையெனத் தெரிவித்துள்ள, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானத்தை, நாட்டு மக்களுக்கு மஹிந்த அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான எந்தவிதமான சட்டச் சிக்கலும் இல்லை எனவும் அவர் கூறினார். 
 “எனவே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷவே தீர்மானிக்க வேண்டும்” எனவும், “ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது ஒன்றிணைந்த எதிரணியோ அவருக்கு இது தொடர்பில் எந்தவிதமான அழுத்தங்களையும் வழங்காது” எனவும் குறிப்பிட்டார்.
இந்தியத் தலைநகரான புதுடெல்லியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை வரவேற்பதற்காக சந்திக்குச் சந்தி அவரின் புகைப்படத்துடன் கூடிய பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன எனவும், மஹிந்தவின் இந்தியப் பயணத்தின்போது, சார்க் வலையமைப்பு நாடுகளின் சிரேஷ்ட தலைவர் என்றவகையிலேயே, அவருக்கு கௌரவமளிக்கப்பட்டதாகவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதன்போது எடுத்துரைத்தார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved