கோதாவுக்கு பாதுகாப்பு வழங்க தயார் - பிரதமர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தான் அறிந்த வரையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் இதனால் கோதாபய ராஜபக்‌ஷவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய வந்தால் அதற்கு தயார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கொண்டுள்ள அக்கறை தொடர்பாக அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் ஆனால் இந்த பற்றை மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிட்ட போது அவரின் பாதுகாப்பை நீக்கிய போது காணக் கிடைக்கவில்லையெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்ய சதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.