Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

'ஜனபலய' இரண்டாவது கட்டம் கண்டியில் நடைபெறும் - நாமல்

Bublished By Online Ceylon on Thursday, September 6, 2018 | 7:25 PM

ஆட்சிக் கவிழ்ப்பு போராட்டத்தின் இரண்டாவது கட்டம் கண்டியில் நடைபெற உள்ளதாகவும், இந்த போராட்டம் தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. 
கொழும்பில் நேற்று நடைபெற்ற போராட்டம் வெற்றிப்பெற்றுள்ளதாக அறிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணியினர், அமைதியாக நேற்று தாம் மேற்கொண்டிருந்த போராட்டத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டிருந்தாகவும், இலங்கையின் போராட்ட வரலாற்றில் 12 மணித்தியாலங்கள் நடைபெற்ற முதலாவது மாபெரும் போராாட்டம் இது எனவும் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லை - நெளும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
போராட்டத்தை முடக்கவும், போராட்டத்தில் குழப்பங்களை விளைவிக்கவும் அரசாங்கம் எடுத்துக்கொண்டிருந்த அனைத்து முயற்சிகளும் இறுதியில் தோல்வியிலேயே முடிந்ததாகவும் அவர் கூறினார்.
தேசிய அரசாங்கத்தை உடனடியாக கலைத்துவிட்டு தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் கொழும்பில் நேற்று (05) எற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணியால், மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருப்பின்,அதற்காக தாம் மன்னிப்பு கோருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர் என்பதனை, அரசாங்கத்துக்கு எடுத்துக்காட்ட முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved