காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியில் கணித விஞ்ஞானப் பிரிவு தொடக்கி வைப்பும், புதிய மாணவர்கள் அனுமதியும்

எம்.ரீ. ஹைதர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரி "மார்க்கப் பின்புலம் கொண்ட துறைசார் அறிஞர் சமூக உருவாக்கம்" என்ற தூரநோக்கோடு கடந்த 2017 ஆம் ஆண்டு உயர் தரப் பிரிவை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. 

சுமார் 75 மாணவர்கள் உள்வாரியாகவும் 200 மாணவர்கள் வெளிவாரியாகவும் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கலை, வர்த்தகம், இயந்திரவியற் தொழிநுட்பம் என்பவற்றோடு மார்க்க அடிப்படை விடயங்களும் குறித்த மாணவர்களுக்கு போதிக்கப்பட்டு வருகின்றமை அல்-மனாரின் சிறப்பம்சமாகும்.

அதன் ஓர் அங்கமாக மாணவர்களின் நலன் கருதி இவ்வருடம் கணித, விஞ்ஞானப் பிரிவு தொடக்கி வைக்கப்படுகின்றது. க.பொ.த உயர்தர கணித, விஞ்ஞானப் பிரிவுக்கு 02 ஆம் மற்றும் 03ஆம் தடவைகள் தோற்றவுள்ள மாணவர்களுக்கு வடிவமைக்கப்பட்ட இப்பாடநெறியில் முன்னனி ஆசிரியர் குழாத்தின் வழிகாட்டலுடன் பண்பாட்டியல் பயிற்சி நெறிகளுடன் கூடிய ஆரோக்கியமான சுய கற்றல் சூழலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பாடநெறிக்கு குறிப்பிட்டளவு மாணவர்களே இணைத்துக் கொள்ளப்படவுள்ளமையால் உங்கள் பதிவுகளை எதிர்வரும் 05.09.2018 - புதன்கிழமைக்கு முன்னர்  மேற்கொள்ளவும்.


தொடர்புகளுக்கு
அஷ்ஷெ்ய்க். எஸ்.எம். சனூஸ் நளீமி,
விரிவுரையாளர்,
 அல்-மனார் அறிவியற் கல்லூரி
தொலைபேசி 077 7883949, 065 2245797
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.